/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணுக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்கு
/
பெண்ணுக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 26, 2025 11:33 PM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே சொத்து பிரச்னையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது அண்ணன் செல்வராஜ். இருவருக்குமிடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று கோவிந்தராசு மனைவி கல்யாணசுந்தரி, 50; வீட்டில் இருந்தபோது, செல்வராஜ், இவரது மனைவி ராஜகுமாரி, வேகாக்கொல்லை கந்தன் மனைவி எழிலரசி ஆகிய 3 பேரும் கல்யாணசுந்தரியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், செல்வராஜ் உட்பட 3 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.