ADDED : ஜூலை 07, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் பழமலைநாதர் நகரை சேர்ந்தவர்கள் முருகன், 46; கணேஷ் மகன் சதீஷ். இருவருக்கும் முன்விரோதம் உள்ள நிலையில், கடந்த 2ம் தேதி முருகன் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சதீஷ், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில், சதீஷ், ராமலிங்கம் மகன்கள் கொளஞ்சி, பாலா, நடராஜ் மகன் விக்னேஷ் ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.