ADDED : அக் 12, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
எம்.புதுார் அருகே மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். விசாரணையில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இது தொடர்பாகஎம்.புதுார் காசிநாதன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.