/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., நிர்வாகியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
/
வி.சி., நிர்வாகியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 11, 2025 11:07 PM
விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக வி.சி., கட்சி மண்டல செயலாளரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 48; வி.சி., மண்டல செயலாளர். அதே பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 31; இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் மோ தல் ஏற்பட்டது.
இதில், அத்திரமடைந்த பழனிசாமி, இவரது ஆதரவாளர்கள் தேவா உள்ளிட்ட 5 பேர், ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், படுகாயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், பழனிசாமி, தேவா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

