/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 23, 2025 07:49 AM
நெய்வேலி : மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளந்தாங்கி மகன் ராஜேந்திரன். இவருக்கும், புவனகிரி அடுத்த மருதுாரைச் சேர்ந்த சக்திவேல் மகள் சவுமியாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
ராஜேந்திரனுக்கு, பெண் வீட்டார் திருமண சீர்வரிசை வரிசையாக 6 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்கள், பைக்கிற்கு 50,000 ரூபாய் வழங்கினர். இந்நிலையில், ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர், கூடுதல் வரதட்சணை கேட்டு சவுமியாவை கொடுமைப்படுத்தினர்.
இதுகுறித்த சவுமியா அளித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ராஜேந்திரன், இவரது தாய் கலியம்மாள், தந்தை வெள்ளந்தாங்கி, சகோதரர் ராஜேஷ், இவரது மனைவி ரேவதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.