/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 12, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: இருதரப்பு மோதல் தொடர்பாக, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லுாரைச் சேர்ந்தவர் வசந்தராஜா, 26; அதே பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன், 48; அதே பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு கட்டியிருந்த ஒலிபெருக்கியை வசந்தராஜா கழற்றியுள்ளார். இதனை செந்தமிழ் செல்வன் தட்டிக் கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தனித் தனியே அளித்த புகாரின் பேரில், வசந்தராஜா, செந்தமிழ்செல்வன் உட்பட 8 பேர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.