/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் விழாவில் தகராறு 9 பேர் மீது வழக்கு
/
கோவில் விழாவில் தகராறு 9 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2025 06:07 AM
குள்ளஞ்சாவடி: கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குள் ளஞ்சாவடி அடுத்த அயன் அகரம் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் மகன் விஜய் சர்மா,17; இவர், குறவன்மேடு பகுதி கோவிலில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கும், வெங்கட்டம்மாள்புரத்தைச் சேர்ந்த அபி என்பவருக்கும், தகராறு ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விஜய் சர்மாவை, அபி மற்றும் அவரது தரப்பினர் கட்டையால் தாக்கினர். இதில், காயமடைந்த அவர், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், அபி, ஆனஸ்ட்ராஜ், பரதன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.