/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நர்சிடம் ஆபாசமாக பேசிய கிள்ளை டாக்டர் மீது வழக்கு
/
நர்சிடம் ஆபாசமாக பேசிய கிள்ளை டாக்டர் மீது வழக்கு
ADDED : நவ 11, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: நர்ஸ்கள் மற்றும் பெண் மருந்தாளுனரிடம் ஆபாசமாக பேசியதாக, அரசு மருத்துவமனை டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிபவர் மாரிமுத்து. இவர், அங்கு பணியாற்றும் பெண் மருந்தாளுநர் மற்றும் செவிலியர்களிடம் ஆபாசமாக பேசுவதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், டாக்டர் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

