/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறு தம்பதி மீது வழக்கு
/
முன்விரோத தகராறு தம்பதி மீது வழக்கு
ADDED : செப் 11, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புவனகிரி அடுத்த தெற்கு திட்டை, மெயின் ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் சிவஞானம்,35; விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்,50; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் சிவஞானம், செல்வராஜ் வீட்டின் வழியாக நடந்து சென்றார்.
அப்போது, செல்வராஜ், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் திட்டியதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வராஜ், சிவஞானத்தை தாக்கினர். புகாரின் பேரில், புவனகிரி போலீசார், செல்வராஜ், தனலட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.