/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முருங்கை பறித்த தகராறு தம்பதி மீது வழக்கு
/
முருங்கை பறித்த தகராறு தம்பதி மீது வழக்கு
ADDED : ஆக 05, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலுார் அடுத்த ரோட்டு மருவாய் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 39;
இவரது சகோதரர் சக்கரவர்த்தி, 42; நேற்று முன்தினம் கோபாலகிருஷ்ணன், சக்கரவர்த்தி வீட்டின் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறித்தார். இதையடுத்து சக்கரவர்த்தி, அவரது மனைவி சுதா, 35; ஆகியோர் கோபாலகிருஷ்ணனை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் தம்பதி மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.