/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.பி.,யிடம் வாக்குவாதம் போதை ஆசாமி மீது வழக்கு
/
எஸ்.பி.,யிடம் வாக்குவாதம் போதை ஆசாமி மீது வழக்கு
ADDED : அக் 20, 2025 12:42 AM

கடலுார்: கடலுாரில் வாகன சோதனையின்போது, காரில் வந்த போதை ஆசாமி எஸ்.பி.,யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தீபாவளியொட்டி, மது கடத்தலை தடுக்க, கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் நேற்று வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலுார் நோக்கி, போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் இருந்தவர்கள் போதையில் இருந்தனர்.
அவர்களிடம், காரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது குறித்து எஸ்.பி., கேட்டார்.
அப்போது, காரை ஓட்டி வந்தவர், என் மனைவி 'போலீஸ்' என பதிலளித்தார். 'இது என்ன அரசு வாகனமா? உங்கள் விருப்பத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டலாமா?' என, கோபமாக பேசிய எஸ்.பி., ஸ்டிக்கரை கிழித்து எரிய உத்தரவிட்டார். போலீசார் ஸ்டிக்டரை அகற்றினர்.
அப்போது, காரில் இருந்து இறங்கி வந்த மற்றொரு நபர், எஸ்.பி.,யிடம் கடும் வாக்குவாதம் செய்தார். காரில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த எஸ்.பி., உத்தரவிட்டார்.
தொடர்ந்து, காரை ஓட்டி வந்தவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடலுார் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம், சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.