/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் மீது வழக்கு
/
அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : ஜூலை 07, 2025 02:00 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரூ. 6 லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டை திருடு போனது குறித்து அ. தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த அணுக்கம்பட்டு, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்,41; இவரும், சென்னை ராஜசேகர் என்பவரும் பண்ருட்டி அடுத்த சீரங்குப்பத்தில் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் நகராட்சி கவுன்சிலர் வேல்முருகன் என்பவரின் முந்திரி கம்பெனியை வாடகைக்கு எடுத்து நடத்தினர்.
இந்நிலையில் கிருஷ்ணராஜிக்கும், வேல்முருகனுக்கும் பணம் சம்பந்தமாக முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிச., 15ம் தேதி கிருஷ்ணராஜ் கம்பெனியை மூடினார். ஒரு மாதம் கழித்து மீண்டும் கம்பெனியை திறந்த போது, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 900 கிலோ முந்திரி கொட்டைகளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் நேற்று வேல்முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.