ADDED : ஆக 10, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் அசோக்குமார், 36; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் இடையே, வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இளையராஜா, அசோக்குமாரை திட்டி தாக்கினார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், இளையராஜா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.