ADDED : அக் 31, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: பெண்ணை ஆபாசமாக திட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மனைவி கீதா, 32; அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார், 39; இருவருக்குமிடையே மனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் குமார், கீதாவை ஆபாசமாக திட்டினார்.
கீதா அளித்த புகாரின் பேரில், குமார் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

