/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு
தடையை மீறி ஆர்ப்பாட்டம் வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு
தடையை மீறி ஆர்ப்பாட்டம் வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : டிச 08, 2024 05:03 AM
புவனகிரி: மஞ்சக்கொல்லையில் தடையை மீறி கொடிக்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வி.சி., நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லையில் வி.சி., மற்றும் பா.ம.க., வினருக்கிடையே கட்சி கொடிக்கம்பம் குறித்த பிரச்னை நிலவி வருகிறது. இதனால், அப்பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலும், அரசியல் கட்சியினர் எவ்வித நிகழ்ச்சியும் நடத்த தடை விதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வி.சி., முகாம் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், சுகுந்தன், பாலசுப்ரமணியன், ராஜவேல் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த வி.சி., கட்சியினர் தடை மீறி அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வி.சி., கொடி கம்பம் பீடத்தில் நின்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மருதுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் அளித்த புகாரின் பேரில் ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.