/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டியை தாக்கிய பெண்கள் மீது வழக்கு
/
மூதாட்டியை தாக்கிய பெண்கள் மீது வழக்கு
ADDED : அக் 17, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: மூதாட்டியை தாக்கிய பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு வழுதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோதண்டபாணி மனைவி முத்தம்மாள், 60; இவரது வீட்டின் அருகே வசிக்கும் உறவினர்களான கௌசல்யா, ஜெயா தரப்புக்கும், மூதாட்டிக்கும் இடையே வீட்டுமனை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கௌசல்யா மற்றும், ஜெயா மூதாட்டியை ஆபாசமாக திட்டி, தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.