/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலுாருக்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு
/
வேலுாருக்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு
வேலுாருக்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு
வேலுாருக்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு
ADDED : அக் 17, 2025 11:32 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள், வேலுார் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடலுார் மாவட்டத்தில், கலெக்டர் முயற்சியால் 140 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதனால் வாகன வாடகை, கூலியாட்கள், உணவு உள்ளிட்ட பல்வேறு இதர செலவினங்கள் தவிர்கப்பட்டன. இவை, நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில், வேலுார் மாவட்டம், காட்பாடி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு, நேற்று சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன .
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் ஏற்றி, அனுப்பி வைக்கும் பணியில் சுமைதுாக்கும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
காட்பாடி கிடங்கில் இருந்து அரவை ஆலைகள் மூலம் அரிசியாக மாற்றப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் மூலம் அங்குள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.