/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறையில் மொபைல் போன் ஆயுள் கைதி மீது வழக்கு பதிவு
/
சிறையில் மொபைல் போன் ஆயுள் கைதி மீது வழக்கு பதிவு
ADDED : மார் 02, 2024 10:35 PM
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் மொபைல் போன் வைத்திருந்த ஆயுள் கைதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் நார்தடி பாஸ்கர்,37; கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில மாதங்களுக்கு முன் கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவர், மொபைல்போனை பதுக்கி வைத்து பயன்படுத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து, அவரை சிறை காவலர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆயுள் கைதி பாஸ்கர், வௌி சிறை பகுதியில் உள்ள கழிப்பறையில் பதுக்கி வைத்திருந்த மொபைல் போனை எடுத்து பேசியபோது, ஜெயிலர் ரவி மற்றும் காவலர்கள் கையும் களவுமாக பிடித்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஜெயிலர் ரவி அளித்த புகாரின் பேரில், ஆயுள் கைதி பாஸ்கர் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

