/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., முன்னாள் அதிகாரி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு
/
என்.எல்.சி., முன்னாள் அதிகாரி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு
என்.எல்.சி., முன்னாள் அதிகாரி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு
என்.எல்.சி., முன்னாள் அதிகாரி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 03, 2025 05:18 AM
நெய்வேலி: நெய்வேலியில், அப்ரண்டிஸ் மாணவர் விபத்தில் சிக்கிய விவகாரத்தில் ஓய்வு பெற்ற என்.எல்.சி., அதிகாரி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 20ல் என்.எல்.சி., கற்றல் மேம்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இம்மையம் சார்பில், ஐ.டி.ஐ.,-டிப்ளமோ மற்றும் பட்டதாரி இன்ஜினியர்களுக்கு தொழில் பழகுனர் (அப்ரண்டிஸ்) பயிற்சி வழங்கப்படுகிறது.
இங்கு, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் ஹென்றிடேனியல்,19; என்பவர் ஐ.டி.ஐ., முடித்து விட்டு, கடந்த 2023ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்தார். பின், நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தில் பயிற்சி பெற்றார்.
கடந்த 2024ம் ஆண்டு ஏப்., 30ம் தேதிஹென்றிடேனியல், சக அப்ரண்டிஸ் மாணவர்கள் தாமஸ், அஜித் ஆகியோருடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, என்.எல்.சி., வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ஹென்றிடேனியல் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அதிகாரி உள்ளிட்டோரின் அஜாக்கிரதையால் மகனுக்கு விபத்து ஏற்பட்டதாாக ஹென்றிடேனியல் தாய் ஜெனிதாராணி, நெய்வேலி தெர்மல் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன்பேரில் தெர்மல் போலீசார், பணி ஓய்வு பெற்ற என்.எல்.சி., முதன்மை மேலாளர் ராதாகிருஷ்ணன், ஆப்பரேட்டர் வள்ளி, போர்மேன் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் என்.எல்.சி., அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.