/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அழகு நாச்சியம்மனுக்கு சாகை வார்த்தல்
/
அழகு நாச்சியம்மனுக்கு சாகை வார்த்தல்
ADDED : ஆக 07, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமம் அழகு நாச்சியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது.
பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமம் அழகு நாச்சியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு உற்சவ விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், செடல் உற்சவமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் ஜெயலலிதா செய்திருந்தார்.