/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சப்த கன்னிமார்கள் கோவிலில் சாகை வார்த்தல்
/
சப்த கன்னிமார்கள் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED : ஜூலை 25, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; அரிசி பெரியாங்குப்பத்தில் சப்த கன்னிமார்கள் கோவிலில், சாகை வார்த்தல் விழா நடந்தது.
கடலுார் அடுத்த அரிசி பெரியாங்குப்பம், கன்னியம்மன் நகரில் சப்த கன்னிமார்கள் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி மாலை குதிரை விடுதல் உற்சவம் நடந்தது.
நேற்று ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி, காலை ஆற்றங்கரையிலிருந்து கரகம் புறப்பாடு நடந்தது.
மதியம் சப்த கன்னிமார் அம்மனுக்கு சாகைவார்த்தல் விழா நடந்தது. இரவு வீதியுலா நடந்தது.