/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமூக பாதுகாப்பு திட்ட முறைகேட்டில் 'கிடுக்கிப்பிடி'; அலசி ஆராயும் சென்னை டீம்

ADDED : பிப் 21, 2024 08:03 AM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியிலுள்ள ஒரு தாலுகா அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளில், கோடிக்கணக்கில் முறைகேடு நடந்தது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தற்காலிக கம்ப்யூட்டர் பெண் ஊழியர் உள்ளிட்ட 5 பேரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக சென்னையிலிருந்து சிறப்பு உயர்மட்டக்குழுவினர் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில், முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை ஆணையரகத்திலிருந்து வந்த நான்கு பேர் கொண்ட டீம், கடந்த 2013லிருந்து 2023வரையிலான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது உள்ளூர் அதிகாரிகள் யாரையும் அனுமதிக்கவில்லை.
உயர்மட்டக்குழுவினர் விசாரணையில், அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள ஒரு சில வங்கிக் கணக்குகளுக்கு லட்சக்கணக்கில், இங்கிருந்து பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சுருட்டிய சொத்துகள் பினாமிகளின் பெயரில் தங்கம், வைரமாகவும், நிலங்களாகவும் வாங்கப்பட்டிருப்பதாகவும், இதில், இரு அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதையடுத்து, சந்தேகப்படும் நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.