/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெற்றோரை கொண்டாடுவோம் மாநாடு மாநில துணைத் தலைவர் அழைப்பு
/
பெற்றோரை கொண்டாடுவோம் மாநாடு மாநில துணைத் தலைவர் அழைப்பு
பெற்றோரை கொண்டாடுவோம் மாநாடு மாநில துணைத் தலைவர் அழைப்பு
பெற்றோரை கொண்டாடுவோம் மாநாடு மாநில துணைத் தலைவர் அழைப்பு
ADDED : பிப் 21, 2025 05:14 AM

விருத்தாசலம்: முதல்வர் பங்கேற்கும் 'பெற்றோர்களைகொண்டாடுவோம்' மாநாட்டில், திரளாக பங்கேற்க, பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முத்துக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை:
தமிழகத்தில் முதன்முதலாக 'பெற்றோர்களைகொண்டாடுவோம்' மாநாடு நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில், பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில தலைவருமான மகேஷ், அதற்கான திட்டம் வகுத்து கொடுத்தார்.
அதையடுத்து, தமிழகத்தை 7 மண்டலமாக பிரித்து, மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில், மதுரையில் முதல் மண்டல மாநாடும், தொடர்ந்து திருச்சி, தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம், திருநெல்வேலியில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், வேப்பூர் அடுத்த திருப்பெயர், ஜெயப்பிரியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி அருகே 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' 7வதுமண்டல மாநாடு நாளை (22ம் தேதி) நடத்தப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
அமைச்சர்கள் மகேஷ், பன்னீர்செல்வம், கணேசன் பங்கேற்கின்றனர்.
காலை 8:30 மணிக்கு துவங்கும்மாநாட்டில், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என, 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில், பெற்றோர், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுகு்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.