ADDED : ஆக 28, 2025 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கருக்கை ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலைக்கான பூமி பூஜையை முன்னாள் சேர்மன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி ஒன்றியம், கருக்கை ஊராட்சியில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 250 மீட்டர் நீளமுள்ள சிமென்ட் சாலை ரூ.20 லட்சம் மதிப்பிலான பணியை ஒப்பந்ததாரர் ஜோதிலிங்கம் எடுத்திருந்தார்.
விழாவில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் சாலை பணியை துவக்கி வைத்தார். இதில் தி.மு.க.,நிர்வாகிகள் கலியபெருமாள், ஜோதிநாதன், விக்ரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.