/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 02, 2024 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : ராஜேந்திரபட்டிணம் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்மபாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பணியை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., ராதிகா, பொறியாளர் ருக்மணி, காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், லாவண்யா, லெனின், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் செந்தமிழ் உட்பட பலர் உடனிருந்தனர்.

