/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய அரசு கடன் : எம்.பி., கேள்வி
/
மத்திய அரசு கடன் : எம்.பி., கேள்வி
ADDED : ஆக 20, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் எம்.பி., யின் கேள்விக்கு, மத்திய அரசு 15.69 லட்சம் கோடி கடன் பெற்றதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டில் கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் மத்திய அரசு பெற்ற கடன்கள் எவ்வளவு, அதில் எவ்வளவு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அளித்த பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2025ம் ஆண்டு மட்டும் 15.69 லட்சம் கோடி கடன் பெறப்பட்டது. தற்போது வரை 200 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது. ஆண்டு முழுவதும் அரசு மீதான கடனின் அளவு, நிதி பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.