/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய தொழில் பாதுகாப்பு படை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
/
மத்திய தொழில் பாதுகாப்பு படை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
மத்திய தொழில் பாதுகாப்பு படை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
மத்திய தொழில் பாதுகாப்பு படை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ADDED : பிப் 16, 2026 07:13 AM

கடலுார்: கடலுாருக்கு வருகை வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக பங்கேற்பை ஊக்குவித்தல், போதைப் பொருள், ஆயுதங்கள், வெடி பொருட்கள் கடத்தலுக்கு எதிராகவும் சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி 6,553 கி.மீ.,துாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதன்பேரில், கடந்த ஜன., 28ம் தேதி துவங்கிய பேரணி வரும், 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், 65 ஆண் வீரர்கள், 65 பெண் வீரர்கள் என, மொத்தம் 130 பேர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். பேரணி புதுச்சேரியில் இருந்து நேற்று கடலுார் வந்தடைந்தது.
கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், பேரணியை வரவேற்றனர்.
என்.எல்.சி., பிரிவு சி.ஐ.எஸ்.எப்., டி.ஐ.ஜி., சித்தான்ஷூ சேக்கர் மிஸ்ரா, டி.எஸ்.பி., தமிழ் இனியன், பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுன்டேஷன் தலைவர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

