ADDED : பிப் 16, 2026 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கைலாசநாதரும் அகிலாண்டேஸ்வரி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.பூஜைகளை பாக்யராஜ் பூசாரி செய்தார்.
அதேபோல் பூலோகநாதர் கோவிலில் பூலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூஜைகளை குமார்,ஹரிபிரபு குருக்கள் செய்தனர்.
எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், வெள்ளபாக்கம் சிவலோகநாதர் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் இரவு முழுவதும் நடந்தது.பூலோகநாதர் கோவிலில் சிறுமிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

