/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களுடன் சி.இ.ஓ., ஆலோசனை
/
பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களுடன் சி.இ.ஓ., ஆலோசனை
பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களுடன் சி.இ.ஓ., ஆலோசனை
பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களுடன் சி.இ.ஓ., ஆலோசனை
ADDED : ஜன 28, 2025 07:05 AM

விருத்தாசலம் : அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெறுவது குறித்து ஆசிரியர்களுடன் சி.இ.ஓ., எல்லப்பன் கலந்தாய்வு நடத்தினார்.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி பெற அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதற்கட்டமாக பத்தாம் வகுப்பு தமிழ் பாட ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, டி.இ.ஓ., துரை பண்டியன், பள்ளி கல்வி ஆய்வாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வினோத்குமார் வரவேற்றார். சி.இ.ஓ., எல்லப்பன் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்களுடன் மாணவ, மாணவிகளை 100 சதவீத தேர்ச்சி பெற வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், எளிய முறையில் கற்பிக்கவும் அறிவுறுத்தினார்.
இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், கம்மாபுரம், நல்லுார், மங்களூர் உள்ளிட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 250 தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, நுாற்றாண்டு விழா கண்ட பள்ளி என்பதால், அரசு சார்பில் விழா எடுப்பது குறித்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடன் சி.இ.ஓ., ஆலோசனை நடத்தினார்.

