/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இல்லம் தேடிக்கல்வி மையத்தில் சி.இ.ஓ., ஆய்வு
/
இல்லம் தேடிக்கல்வி மையத்தில் சி.இ.ஓ., ஆய்வு
ADDED : பிப் 23, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி,: திட்டக்குடி நகராட்சியில் செயல்படும் இல்லம் தேடிக்கல்வி மையத்தை, கடலுார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் திட்டக்குடி பகுதியில் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திட்டக்குடியில் செயல்படும் இல்லம் தேடிக்கல்வி மையத்தில் கடலுார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பழனி ஆய்வு செய்தார். மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சாம்விக்டர் மதன்லால், வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் வழியரசன், தன்னார்வலர் ஆர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.