தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நிறைவு

 ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நிறைவு

 ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நிறைவு


ADDED : செப் 02, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் மூன்று நாள் ஆராதனை விழா நேற்றுடன் நிறைவடைந்தது.

புவனகிரியில் ராகவேந்திரர் அவதரித்த இல்லம் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.இங்கு 39ம் ஆண்டு ஆராதனை விழா கடந்த 29ம் தேதி காலை சுப்ரபாத சேவையுடன் துவங்கி வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் பூர்வ ஆராதனையும், 30ம் தேதி புண்ணிய ஆராதனை நடைபெற்றது.

நேற்று முன்தினம் 31ம் தேதி உத்தர ஆராதனையும் சுவேத நதி தீர்த்தத்துடன், மந்திராலயம் மரபுபடி, அபிஷேக, அலங்காரம், தீப ஆராதனை நடந்தது.

ஏற்பாடுகளை ராகவேந்திரர் புனிதத்தொண்டு அறக்கட்டளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலார் டாக்டர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் ரமேஷ் ஆச்சாரியர் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us