ADDED : ஆக 18, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,; விருத்தாசலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் விஸ்வநா தன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சுசீலா, முன்னாள் இந்திய விமானப்படை வீரர் நிஜாம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா நடத்திய ஹிந்தி தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வள்ளிக்கண்ணு நன்றி கூறினார்.