/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.இ.டி., பள்ளியில் சுதந்திர தினம்
/
வி.இ.டி., பள்ளியில் சுதந்திர தினம்
ADDED : ஆக 18, 2025 12:41 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த எருமனுார் வி.இ.டி., மேல்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா நடந்தது.
கல்வி குழும தலைவர் பத்மாவதி சக்திவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் கீர்த்திகா செல்வராஜ், செயலர் இந்திரா வீரராகவன் தேசிய கொடியேற்றி வைத்து பேசினர். தலைமை ஆசிரியர் பிரபாகரன் வரவேற்றார்.
குறுவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் வென்று 107 பதக்கங்களை வென்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பாலாஜி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மோகன் ராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
பு.முட்லுார் ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிறுவனர் மதியழகன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் தசரதன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்விராயர், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கனகசபை தேசிய கொடியேற்றினர். பள்ளி முதல்வர் சுமதி மதியழகன், இயக்குனர் கார்த்திகேயன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பன்னீர்செல்வம், தாஜ்மல் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.