ADDED : ஆக 17, 2026 08:03 PM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், நல்வாழ்வு சங்கம் சார்பில், இலவசமாக தையல் பயிற்சி பெற்ற 100 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கம் சார்பில், இலவசமாக தையல் பயிற்சி வகுப்பு கடந்த மூன்று ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, 100 பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முடித்த பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கும் விழா நல்வாழ்வு சங்க அலுவலகத்தில் நடந்தது. நல்வாழ்வு சங்க தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். சேர்மன் தேன்மொழி முன்னிலை வகித்தார். தையல் பயிற்சி முடித்த 100 பெண்களுக்கு, மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் சான்றிதழ் வழங்கினார். விழாவில், இப்ராஹிம் மாலிமார், ஜெயின் ஜெயினுல்லாபுதீன், கவிமதி, நிஜாமுதின், கவுன்சிலர் அருள்முருகன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் நகர செயலாளர் உசேன் பங்கேற்றனர்.
