தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், தடுப்பு பயிலரங்கம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், தடுப்பு பயிலரங்கம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், தடுப்பு பயிலரங்கம்


ADDED : ஆக 31, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம், செப் 1 –

சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,  மாவட்ட மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை மற்றும் மருத்துவ அறிவியல் கழகம் சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த பயிலரங்கம் நடந்தது. 

பயிலரங்கத்தை கல்லூரி முதல்வர் பாஸ்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தாார். மருத்துவமனைக் கண்காணிப்பாளர் சுந்தரேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர்கள் பாலாஜி சுவாமிநாதன், சசிகலா, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ துறை பேராசிரியர் மிருணாளினி உள்ளிட்டோர் பேசினர்.

 பயிலரங்கில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ முதுநிலை மருத்துவர்களுக்கு ஹெச்பிவி தடுப்பு, தடுப்பூசி, ஸ்கிரீனிங், கால்போஸ்கோப்பி, சந்தேகமான முடிவுகளை அடையாளம் காணுதல் மற்றும் உரிய மேற்சிகிச்சைக்கு பரிந்துரைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us