UPDATED : அக் 15, 2026 07:46 PM
ADDED : அக் 15, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பள்ளிகளில் படிக்கும் 14 முதல் 15 வயதுடைய மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் நேற்று ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையதத்தில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் தலைமையில் டாக்டர்கள் தடுப்பூசி போட்டனர். இதில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் செவிலியர்கள் கலந்துக் கொண்டனர்.
