sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலை  

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலை  

மூதாட்டியிடம் செயின் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலை  

மூதாட்டியிடம் செயின் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலை  


ADDED : மே 05, 2025 05:58 AM

Google News

ADDED : மே 05, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; ரெட்டிச்சாவடி அருகே கூழ் விற்பனை செய்த மூதாட்டியிடம் 5 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் அடுத்த புதுக்கடை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அஞ்சலாட்சி 53; இவர் விழுப்புரம்-நாகப்பட்டிணம் புறவழிச்சாலையில் ரெட்டிச்சாவடி அருகே கூழ் விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் அவர் கூழ் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கூழ் வாங்கி குடித்தனர். பின், அஞ்சலாட்சி பாத்திரத்தை கழுவும்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை ஒரு வாலிபர் பறித்துக் கொண்டு பைக்கில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றார். அஞ்சலாட்சி கூச்சலிட்டும் அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர்.

செயின் மதிப்பு 5 லட்சம் ரூபாய். ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us