தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மூன்று மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு காட்டுமன்னார்கோவிலில் துணிகரம்

மூன்று மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு காட்டுமன்னார்கோவிலில் துணிகரம்

மூன்று மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு காட்டுமன்னார்கோவிலில் துணிகரம்


ADDED : அக் 26, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: கோவில் கும்பாபிேஷகத்தில் மூன்று பெண்களிடம் செயின்களை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில், அண்ணா நகரில் தனி நபர் கட்டிய சாய்பாபா கோவில் மகா கும்பாபிேஷகம் இன்று (அக்.,26) நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் சையத் அப்சல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

இருப்பினும், கூட்ட நெரிசலில், உடையார்குடி வளையக்காரத் தெரு லட்சுமிகாந்தன் மனைவி கலைச்செல்வி 61; அண்ணா நகர் வீரமணி மனைவி செல்வாம்பாள்,65; ஆகியோர் அணிந்திருந்த தலா 3 சவரன் செயின் மற்றும் அண்ணாநகர் ஜீவா தெரு சுந்தரேசன் மனைவி வேம்பு 64; அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

கும்பாபிேஷக கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பை மீறி மூன்று பெண்களிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவத்தால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து போலீசார், அங்கிருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us