/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்கால் துார் வாரும் பணி சேர்மன் துவக்கி வைப்பு
/
வாய்க்கால் துார் வாரும் பணி சேர்மன் துவக்கி வைப்பு
வாய்க்கால் துார் வாரும் பணி சேர்மன் துவக்கி வைப்பு
வாய்க்கால் துார் வாரும் பணி சேர்மன் துவக்கி வைப்பு
ADDED : அக் 24, 2025 03:10 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை சேர்மன் துவக்கி வைத்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியின் இருபுறமும் நெல்லிக் குப்பத்தான், வெள்ளப் பாக்கத்தான் வாய்க்கால் கள் செல்கிறது.
இந்த வாய்க்கால்கள் இருப்பதால் நகர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எளிதாக வெளியேறிவிடும்.
மழைக்காலத்தில் நகரில் தேங்கும் நீரும் இந்த வாய்க்கால் வழியே வடிந்து விடும். ஆனால் வாய்க்கால்களை தூர் வாராததால் புதர்கள் மண்டி தண்ணீர் செல்ல வழியில்லாதால் நகரப்பகுதியில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளதாக நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறினர்.
இதன் தொடர்ச்சியாக ரூ.18 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை சேர்மன் ஜெயந்தி, கமிஷ்னர் கிருஷ்ணராஜன் துவக்கி வைத்தனர்.
இதேபோல் பொதுப்பணி துறையின் கட்டுபாட்டில் உள்ள வாய்க்கால்கள் துார் வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது.

