ADDED : மே 12, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வரவூர் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நடந்த செடல் தேர் ரத பெருவிழா நடந்தது.
கடலுார், புதுவண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி காளிகா பூஜை உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் நாள் உற்சவமான நேற்று மாரியம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்பர் சுவாமி குளக்கரையில் இருந்து கோவிலுக்கு பூங்கரகத்துடன் கங்கையம்மன், காளிகா பரமேஸ்வரி, மாரியம்மன் ஆகியவை சக்ர செடல் தேர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து, கோவிலில் மாரியம்மனுக்கு பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை அக்கினி சட்டி ஊர்வலம் நடந்தது.