/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்து மாரியம்மன் கோவிலில் இன்று தேர்
/
முத்து மாரியம்மன் கோவிலில் இன்று தேர்
ADDED : மே 09, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கொக்காம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று நடக்கிறது.
விருத்தாசலம் அடுத்த கொக்காம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷகம், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்து வருகிறது.
இன்று (9ம் தேதி) மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 5:00 மணிக்கு முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நடக்கிறது. நாளை 10ம் தேதி மஞ்சள்நீர் உற்சவம், 11ம் தேதி சாகை வார்த்தல் நடக்கிறது.

