/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
/
விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
ADDED : ஜூன் 30, 2025 04:11 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் கோவில்களில் விநாயகர் சுவாமிக்கு சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், முப்பிள்ளையாருக்கு சதுர்த்தியொட்டி நேற்று காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.
இதேப் போன்று, காந்தி நகர் நர்த்தன விநாயகர், தெற்கு தெரு யாகசாலை விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ஆற்றங்கரை சித்தி விநாயகர், ரயில்வே குடியிருப்பு செல்வ விநாயகர், கடலுார் ரோடு விஜய விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.