ADDED : மார் 31, 2025 05:15 AM

விருத்தாசலம் : மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் புதிதாக கட்டப்படும் தடுப்பணையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார், பரவளூர், கோமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்தது. இதன் காரரணமாக, மணவாளநல்லுார் பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சட்டசபையில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார். அதன்பேரில், மணிமுக்தாற்றில், 25.20 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.