/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்னை ராதா இன்ஜினியரிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
சென்னை ராதா இன்ஜினியரிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை ராதா இன்ஜினியரிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை ராதா இன்ஜினியரிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜன 13, 2025 04:02 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகில் சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பொங்கல் விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள பூவிழுந்தநல்லூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனர் வெங்கடேசன் சார்பில் 40 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது.
சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் கிராம மக்களுக்கு தங்க நாணயங்கள் பாத்திரங்கள், போர்வைகள் மற்றும் உதவித்தொகை என, 697 நபர்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கிராம தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் திரிபுரசுந்தரி பத்மநாபன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஞானம், ஆசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் ஒரு நபருக்கு எட்டு கிராம், 5 நபர்களுக்கு நான்கு கிராம், 27 நபர்களுக்கு இரண்டு கிராம் தங்க காசுகள் வழங்கப்பட்டது. 45 நபர்களுக்கு தலா ஆயிரம் ஊக்கத்தொகை அளித்தனர்.
மேலும் மாட்டுப் பொங்கல் அன்று, சுற்றியுள்ள கிராம மக்கள் 15 ஆயிரம் பேர்களுக்கு போர்வை மற்றும் உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது.