ADDED : ஆக 10, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : ரெட்டிச்சாவடியில் கோழிக் கடையில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் சுரேஷ்,25; ரெட்டிச்சாவடி பஸ் நிறுத்தம் அருகில் கோழி இறைச்சிக்கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை 5:30 மணிக்கு வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, எடைக்கல், தட்டு உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டைச் சேர்ந்த லுார்துசாமி,47, என்பவரை கைது செய்தனர்.

