/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலை வாங்கி தருவதாக மோசடி மூவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை சிதம்பரம் கோர்ட்டில் தீர்ப்பு

ADDED : பிப் 02, 2025 04:24 AM
கடலுார் : சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக போலி உத்தரவை கொடுத்து, ரூ. 15.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், மூவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்தீர்ப்பு வழங்கியது.
சிதம்பரம் பதினாறுகால் மண்டப தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் ராஜா. இவருக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி, 2011ம் ஆண்டு, வல்லம்படுகையை சேர்ந்த செந்தில், 40, சிதம்பரம் அம்மாப்பேட்டை கதிரவன், 45; எழிலரசன், வல்லம்படுகை அப்பு என்கின்ற தமிழ்ச்செல்வன் 49; ஆகிய நான்கு பேரும் சேர்ந்து 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெற்றனர்.ஆனால், வேலை வாங்கி தராமல், போலியாக பணி உத்தரவு தயார் செய்து கொடுத்து மோசடி செய்தனர்.
இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரில், கடலுார் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார், 2011ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட் (1)ல், வழக்கு நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த செந்தில், கதிரவன், அப்பு (எ) தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை, 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பு கூறினார்.
எழிலரசன் தலைமறைவு குற்றவாளியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.