/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளங்கள் பாதுகாப்பில் 'தினமலர்' பங்களிப்பு சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் பாராட்டு
/
குளங்கள் பாதுகாப்பில் 'தினமலர்' பங்களிப்பு சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் பாராட்டு
குளங்கள் பாதுகாப்பில் 'தினமலர்' பங்களிப்பு சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் பாராட்டு
குளங்கள் பாதுகாப்பில் 'தினமலர்' பங்களிப்பு சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் பாராட்டு
ADDED : ஆக 16, 2025 03:16 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி கூட்டம் சேர்மன் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
துணை சேர்மன் முத்துக்குமரன், கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது:
துணை தலைவர் முத்துக்குமரன் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நீர்நிலைகளில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டனர். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி கவுன்சிலர் வெங்கடேசனும் பேசினார்.
அப்பு சந்திரசேகரன் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிதம்பரம் நகராட்சியில் 300 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை.
மக்கின் எனது வார்டில் 2 கோடிக்கு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்துள்ளது. இதற்காகவே நகராட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புகழேந்தி 7வது வார்டில் கடந்த 13 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் மோசமான நிலையில் இருந்தது. தற்போது, 23 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சேர்மன் செந்தில்குமார் பேசுகையில், ' சிதம்பரம் நகராட்சியில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிதம்பரத்தில் 7 குளங்கள் துார்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் சிதம்பரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குளங்கள் மேம்பாடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி, அவர் பாராட்டினார். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டங்கள் 75 சதவீத முடிவடைந்துள்ளது' என்றார்.
கூட்டத்தி ல், கவுன்சிலர்கள் அறிவழகன், ராஜன், அசோகன், சரவணன், புகழேந்தி, ராஜா, ஹகிலா, லதா, கல்பனா, தாரணி , சித்ரா, தஸ்லிமா, கவிதா உட்பட பலர் பங்கேற் றனர்.