/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., மருத்துவரணி சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா
/
தி.மு.க., மருத்துவரணி சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா
தி.மு.க., மருத்துவரணி சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா
தி.மு.க., மருத்துவரணி சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : மார் 05, 2024 05:58 AM

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., மருத்துவரணி மற்றும் இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மருத்துவர் அணி அமைப்பாளர் கலைக்கோவன் ஏற்பாட்டில் 'நாடும் நமதே; நாற்பதும் நமதே' என்பதை வலியுறுத்தி 40 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் கேக் வெட்டி வழங்கினர்.
விழாவில், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி கார்த்திக், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.