/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் விழா: முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
/
முதல்வர் விழா: முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
முதல்வர் விழா: முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
முதல்வர் விழா: முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
ADDED : ஜூலை 13, 2025 12:41 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
சிதம்பரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் மேடை அமைத்தல் மற்றும் முன்னாள் எம்.பி., இளையபெருமாள் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களில் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாளை (14ம் தேதி) இரவு தமிழக முதல்வர் ஸ்டாலின், மாலை ரயில் மூலமாக சிதம்பரம் வருகை தருகிறார். மறுநாள் 15ம் தேதி காலை சிதம்பரத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அருகில் உள்ள வாண்டையார் மண்டபத்தில் 9:00 மணிக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை துவக்கி வைக்கிறார். பின், பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறுகிறார். மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெற்று பேசுகிறார்.
இத்திட்டத்தின் மூலமாக 4 மாதங்களில் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட உள்ளது. கடலுார் மாவட்டத்தில் 368 இடங்களில் முகாம் நடக்கிறது. இதில் 19 துறைஅதிகாரிகள் பங்கேற்கின்றனர். வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் முகாம் நடப்பது குறித்து தகவல் தெரிவித்து வருகிறோம்.
முன்னாள் எம்.பி., இளையபெருமாளின் மணிமண்டபத்தையும், அவரது வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் 40 தொகுதியிலும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உடனிருந்தனர்.