/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களுடன் முதல்வர் திட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
மக்களுடன் முதல்வர் திட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்களுடன் முதல்வர் திட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்களுடன் முதல்வர் திட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : பிப் 17, 2024 05:28 AM

கடலுார் : கடலுாரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து 10,113 மனுக்கள் பெறப்பட்டது.
இதில், தகுதிவாய்ந்த 7,788 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், மின்சார இணைப்பு, வங்கி கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலுாரில் நடந்தது.
ஆர்.டி.ஓ., அபிநயா வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கலெக்டர் அருண்தம்புராஜ், துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்டமாக 747 பேருக்கு 30 லட்சத்து 51 ஆயிரத்து 93 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி பாலாஜி, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தாசில்தார் பலராமன் நன்றி கூறினார்.